Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
ஜப்பான் நாட்டின் சார்பில் வருகைதந்த இளைஞர், யுவதிகளை வரவேற்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது.
உலகளாவிய இளைஞர் தலைமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிதிட்டத்துக்கு அமைய, புரிந்;துணர்வு மற்றும் மனிதநேய நடைமுறைகளை ஊக்குவிக்கும் 'நிப்பொண்மாரு - நல்லெண்ண உலக சுற்றுலா' என்பதற்கு ஏற்ப இவர்கள் வருகை தந்தனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் கே.தவராஜாவின் மேற்பார்வையின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வாழிகாட்டலுடன் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனமும் வாகரை பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்;து இந்த வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்தன.
இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, முதலாவதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உருவாக்கத்தில் 'லலிதா கலா' நாட்டியக்குழுவினரின் நடனம் உட்பட கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன் பின்னர், மனிதநேயம் பேணும் சிரமதானம் வாகரை மாவட்ட வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துதல், சுற்றுமதிலுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்டவை முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டு இளைஞர் குழுவினர், தமது வருகைக்கான நினைவாக வர்ணம் பூசப்பட்ட சுவரில் தமது நாட்டின் தேசியக்கொடியுடன் கூடிய கப்பலை வரைந்;து தமது பெயர்களையும் குறிந்துக்கொண்டனர். அத்துடன், வாகரை பிரதேச சம்மேளனத்துக்கும் வைத்தியசாலைக்கும் நினைவுச்சின்னமும்; வழங்கினர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாகப்பணிப்பாளர் மனுல சமல் பேரேரா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.என்.எம்.நைறூஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி தின பூஜை வழிபாட்டில், ஜப்பான் நாட்டிலிருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.



4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago