Gavitha / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முனைக்காடு மேற்கு கிராமத்திலுள்ள கிராம மக்களுக்கு உக்டா நிறுவனம், மிகக் குறைந்த விலையில் தேவையான பொருட்களை வழங்கும் பொருட்டு உக்டா மல்ரி சொப் எனப்படும் பல சரக்கு விற்பனை நிலையமொன்;றை திங்கட்கிழமை (23) திறந்துவைத்தது.
உக்டா நிறுவனத்தின் தலைவர் இ.குகநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், மண்முனை தென்மேற்கு கோட்டக் கல்விப்பணிப்பாளர் என்.தயாசீலன், மற்றும் வேர்ள்ட் விஸன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஜி.ஜே.அநுராஜ், திட்ட இணைப்பாளர் அமுதராஜ் கீர்த்தி உட்பட உக்டா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இப்பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டினை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு நிதி தேவையின் நிமித்தம், முதற்கட்டமாக உக்டா நிறுவனம் மல்ரி சொப் பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றினை அமைத்துள்ளது.
அதனூடாக சிறு நிதியினை ஈட்டும் முகமாக கிராம மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் தேவையான பொருட்களை வழங்கும் பொருட்டு உக்டா நிறுவனம் இந்த மல்ரி சொப் பலசரக்கு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என உக்டா நிறுவனத்தின் தலைவர் இ.குகநாதன் தெரிவித்தார்.
மேற்படி உக்டா நிறுவனம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் சிறுவர்களின் முழுமையான வாழ்வு எனும் தொனிப் பொருளில் கல்வி சுகாதாரம், பொருளாதாரம் போன்ற துறைகளினூடாக வாழ்வாதார மேம்பாட்டு செயற்பாட்டு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக தலைவர் இ.குகநாதன் மேலும் தெரிவித்தார்.

4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago