Gavitha / 2015 பெப்ரவரி 24 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள கோடைமடு நவசக்தி வித்தியாலயத்தில் சாதனை படைத்த மாணவர்கள் திங்கட்கிழமை (23) பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் எஸ்.மயில்வாகனம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.திரவியராசா, உதவிக்கல்விப்பணிப்பாளர் பி.வரதராஜன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் கே.பேரின்பராசா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் முதன் முறையாக இப்பாடசாலையில் சித்தியடைந்த கி.ஸியானுகா, எஸ்.டிசோஜிஸன் ஆகிய இருமாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
மிகவும் பின் தங்கிய பாடசாலையான இந்தப்பாடசாலையில் கடந்த வருடம் இரு மாணவர்கள் முதல் முறையாக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
இவ்வாறான மாணவர்களை பாராட்டும் வைபவங்கள் ஏனைய மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தும் என இங்கு உரையாற்றிய பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் தெரிவித்தார்.
இதற்காக உழைத்த அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago