Gavitha / 2015 பெப்ரவரி 24 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (23) மாலை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் சா.மதிசுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, மட்டக்களப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், கல்வி வலய பொறியியலாளர் ஆர்.கிருஸ்ணதாசன், ஆசிரிய ஆலோசகர் பொ.செல்வநாயகம், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது விளையாட்டு வீரர்களால் ஒலிம்பிக் தீபம், கொடிகள் ஏற்றப்பட்டதுடன், அணி நடை பவனியுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், பழைய மாணவர் நிகழ்ச்சிகள், ஆசிரியர்கள் நிகழ்ச்சிகள், பெற்றோர் நிகழ்ச்சிகள் உட்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இதன்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் கலந்து கொண்ட அதிதிகளால் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் முல்லை இல்லம் (நீலம்) முதலாம் இடத்தையும், மருதம் இல்லம் (பச்சை) இரண்டாம் இடத்தையும், குறிஞ்சி இல்லம் (சிவப்பு) மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago