Sudharshini / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு நகரை நோக்கி வரும் உல்லாசப் பிரையாணிகளைக் கவரும் வகையில், பிரதான வீதிகளின் நடுவே பூ மரங்கள் நடும் திட்டம்; இன்று சனிக்கிழமை (28) கல்லடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நகர அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரின் முனை வீதி, சுங்க வீதி, திருமலை வீதிகளின் நடுவே பூமரங்களை வைத்து பராமரிக்கவுள்ளதாக மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
இதனைடுத்த முதல்கட்ட நடவடிக்கையாக மட்டக்களப்பு –கல்முனை பிரதான நெடுங்சாலையின் நடுவே கல்லடி மணிக்கூட்டக் கோபுரத்திலிருந்து நகரை நோக்கி வீதியின் நடுவில் பூமரங்கள் நடும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
இத்திட்டம் கல்லடி ஐக்கிய மக்கள் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் யு. உதயகாந் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago