Suganthini Ratnam / 2015 மார்ச் 03 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 60 பெண்களுக்கு இலவசமாக 6 மாதகால பயிற்சியுடன் தைய்யல் மெஷின்களும் நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.
இந்தப் பயிற்சிக்காக 60 தைய்யல் மெஷின்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீனால் வழங்கப்பட்டன.
இதற்கமைய ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐயன்கேணி, மீராகேணி, வாளியப்பா தைக்கா ஆகிய மூன்று இடங்களில் தைய்யல் பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டு, தலா 20 தைய்யல் மெஷின்களுடன் பயிற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
பயிற்சி முடிவில்; சான்றிதழ்களுடன், சுமார் 26 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தையல் மெஷின்களும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள இந்தப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதற்காக வழங்கப்படும் என்றும் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு புடவைக் கைத்தொழில் திணைக்களப் பணிப்பாளர் நவாஸ் முஸ்தபா, ஏறாவூர் நகரசபை பதில் தவிசாளர் எம்.ஐ.எம்.தஸ்லீம், செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், ஆட்டோ சங்கத் தலைவர் அப்துல் வகாப், புடைவைக் கைத்தொழில் திணைக்கள அதிகாரிகள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago