Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 11 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வா.கிருஸ்ணா
'கிழக்கு மாகாணத்தில் புதிய ஆட்சியை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். எவ்வாறு மத்தியில் ஒரு கூட்டாட்சி நிலவுகின்றதோ, அதைவிட சிறந்த ஆட்சியை கிழக்கு மாகாணசபையில் நிறுவியுள்ளோம். அதற்காக பங்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்' இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் பிரிந்துசெல்லாமல் ஒன்றுபட்டு உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும்.
இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார். நல்லாட்சியை மேற்கொண்டுவருகின்றார். அதன் அடிப்படையில் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் இன, மத வேறுபாடுகளை, கட்சி வேறுபாடுகளை மறந்து, விட்டுக்கொடுப்புகளை செய்து செயற்படுதவற்கு நாங்களும் இணைந்துள்ளோம். கிழக்கு மாகாண மக்களின் முன்னேற்றத்துக்காக, வளர்ச்சிக்காக, அவர்களின் கண்ணீரை துடைப்பதற்காக இந்த இணைவை தொடர்ந்து பேணுவோம். அதற்காக எந்த விட்டுக்கொடுப்பையும் செய்ய நாங்கள் தயாராகவுள்ளோம்.
மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வந்தவர்கள். அரசியல் அதிகாரம் மக்களின் துயர் துடைக்கும் பதவியே தவிர, எமது சுய இலாபங்களுக்காக, சுயகௌரவத்துக்காக வழங்கும் பதவி அல்ல.
கிழக்கு மாகாணசபை முன்னோடியான மாகாணசபையாக கிழக்கு மாகாணத்துக்கு மட்டுமன்றி, இந்த நாட்டுக்கு முன்னோடியாகவும் இந்த மாகாணசபையில் ஆட்சி மலரும். எந்தவித இன வேறுபாட்டுக்கும் இடமில்லாமல், அனைத்து இனத்துக்கும் சம அளவிலான பங்கீடுகள் வழங்கப்பட்டு சிறந்தமுறையில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறான நல்லாட்சியில், மக்களும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடவேண்டும். இன முரண்பாடுகள் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்பட்டால், எமது அடிமட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் 98 சதவீதமாக உள்ளன. இந்த மாவட்டத்தில் இரண்டு இனங்களும் ஒற்றுமைப்படவேண்டிய காலகட்டமாகும். கடந்த 30 வருடங்களாக மறக்கமுடியாத பல துர்ப்பாக்கிய சம்பவங்களினால் நாங்கள் பிரிந்துநின்றோம். ஆனால், தொடர்ந்து நாங்கள் பிரிந்திருக்கமுடியாது. அரசியல்வாதிகள் ஒற்றுமைப்படுவது போன்று, அதிகாரிகளும் பொதுமக்களும் ஒன்றுபடவேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஒன்றுபட்டால் எங்களை யாராலும் பிரிக்கமுடியாது. ஒன்றுபடும்போது எங்களது உரிமைகளை யாராலும் தடுத்துநிறுத்தமுடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறான நிலையில் நாங்கள் பிரிந்துநிற்காமல், எங்களது உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் சிந்தித்து செயற்படவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago