2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் நகரசபை தவிசாளராக எம்.ஐ.எம்.தஸ்லீமை நியமிக்க சிபாரிசு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 11 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகரசபையில் தவிசாளர் வெற்றிடம் உள்ள நிலையில்  தற்போது பிரதித் தவிசாளராகவுள்ள எம்.ஐ.எம்.தஸ்லீமை, ஏறாவூர் நகரசபையின் தவிசாளராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவினால் தேர்தல் அலுவலகத்துக்கு  சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகரசபையின் தவிசாளராக இருந்த அலி ஸாஹீர் மௌலானா கிழக்கு மாகாணசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை அடுத்து, ஏறாவூர் நகரசபையில் தவிசாளர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.  

அந்த வகையில், ஏறாவூர் நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பிரதித் தவிசாளராக இருந்த எம்.ஐ.எம்.தஸ்லீம் தவிசாளராகவும் அதன் அடிப்படையில் அடுத்த இடத்தில் உறுப்பினராக இருந்த எம்.எல்.றெகுபாசம் பிரதித் தவிசாளராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்களின் பெயர் விபரங்கள் தேர்தல் அலுவலகத்துக்கு  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவினால் சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • a.nahufarali Thursday, 12 March 2015 06:31 AM

    Congaragilations!Nice Man.I pray to his future performance

    Reply : 0       0

    a.nahufarali Thursday, 12 March 2015 06:31 AM

    Congaragilations!Nice Man.I pray to his future performance

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X