2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வட, கிழக்கு மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி நகர்கின்றோம்: அரியநேந்திரன்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 11 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

'பல மாற்றங்கள் வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, வட, கிழக்கு மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றோம்'  இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஆட்சி மாற்றம் ஏன் வந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வைத்த  பாசத்தினால் நாங்கள் வாக்களிக்கவில்லை.  இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு வாக்களித்ததன் நிமிர்த்தமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில்  62 நாட்கள் கடந்துள்ளன. மீதியாகவுள்ள நாட்களுக்குள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருக்கக்கூடிய விடயங்களை நிறைவேற்றுவார்களா? இல்லையா? என்பது ஒரு கேள்விக்குறி. அவர்கள் நிறைவேற்றுவார்கள் அல்லது நிறைவேற்றாமல் விடுவார்கள்.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாற்றம் என்பதில் நாங்கள் என்ன மாற்றத்தை கண்டுள்ளோம் என்றால்,  ஒரு சில மாற்றங்களே  இடம்பெற்றுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியமைக்கு  இணங்க வடமாகாணத்தில் ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார்.  அங்கு முதலமைச்சரின் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில்  ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல விளையாட்டு நிகழ்வுகளுக்கு செல்கின்றது. இதுவும் ஒரு மாற்றம். இந்த மாற்றம் வராமல் இருந்திருந்தால்,  வந்தாறுமூலையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வுக்கும் நாங்கள் வந்திருக்கமாட்டோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X