2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குவைத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கொண்டுவர நடவடிக்கை

Princiya Dixci   / 2015 மார்ச் 12 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்பவரே இவ்வாறு குவைத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றிருக்கின்றார். ஆரம்ப காலத்தில் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கதைத்த இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் யுவதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 01.03.2015 அன்று அவர் வேலை செய்த வீட்டில் உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு அறியக்கிடைத்துள்ளது. எனினும் காரணம் அறியப்படவில்லை.

இந்த பெண்ணின் உறவினர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் அதன் அலுவலகத்துக்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண், நான்கு வயதுடைய குழந்தையையுடைய கைம்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X