Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 12 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக வாழ்வின் எழுச்சித் திணைக்களம் ஏற்பாடு செய்த 'பெண்களும் இஸ்லாமும்' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு, பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய பிரதான மண்டபத்தில் புதன்கிழமை(11) மாலை இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி திணைக்கள தலைமை முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், வாழ்வின் எழுச்சித் திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ.பஷீர், வாழ்வின் எழுச்சித் திணைக்கள சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
பிறைந்துரைச்சேனை 206ஏ வடக்கு மற்றும் பிறைந்துரைச்சேனை 206சி தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் வளவாலராக ஓட்டமாவடி – நாவலடி தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் அதிபர் எம்.பி.எம்.இஸ்மாயில் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago