2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நூறு நாள் வேலைத்திட்டத்தில் தேவைகள் நிறைவுசெய்யக் கோரி ஊர்வலம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 12 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமது தேவைகளையும் நிறைவு செய்யுமாறு கோரி செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  கவனயீர்ப்பு  ஊர்வலம் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள செவிப்புலனற்றோர் பாடசாலையிலிருந்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் போதனாசிரியர்  துர்கா பிரதீபன் தலைமையில் ஊர்வலம் ஆரம்பமானது. இந்த  ஊர்வலத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.

செவிப்புலனற்றோருக்குரிய பாடசாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 07 வரையே உள்ளது. அதனை குறைந்தது கா.பொ.த.சாதாரண தரம் வரையிலாவது ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும். வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் போன்ற பல கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை ஊடாக இது தொடர்பான சட்டம் நாடாளுமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும,; அன்றைய நாடாளுமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, புதிய அரசாங்கம் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கூறிய தமது பிரச்சினைகளை உள்வாங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இதன்போது கோரப்பட்டது.

'நாம் அனைவரும் இந்த நாட்டு பிரஜைகளே ஏற்றத்தாழ்வுகள் ஏன்', 'எல்லோருக்கும் கட்டாயக்கல்வி எமக்கு எட்டாக்கல்வியாவது ஏனோ?', 'அனுதாபம் வேண்டாம் அணுகும் வசதிவேண்டும்' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை இவர்கள் தாங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம்வரை  இந்த ஊர்வலம் சென்றதுடன்,  மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X