2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாம் வீதியை செப்பனிட ந.தே.மு. நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 13 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிய காத்தான்குடி, பரீட் நகர் பாம் வீதி மிக மோசமடைந்து காணப்படுகின்றமையால், மக்களின் தேவை கருதி தமது சொந்த செலவில் செப்பனிட்டுக் கொடுப்பதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்வந்துள்ளது.

இதற்கான அனுமதியை உடனடியாக வழங்குமாறு காத்தான்குடி நகரசபையிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரியுள்ளது. இது தொடர்பாக அனுமதி கோரும் கடிதம்  நகரசபை உறுப்பினர்களான எஸ்.எச்.பிர்தௌஸ் மற்றும் எம்.எச்.ஏ.மிஹ்ழார் ஆகியோர் கையொப்பமிட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை  நகரசபையில் கையளித்தனர்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'புதிய காத்தான்குடி மக்களின் அன்றாட  போக்குவரத்துக்காக நாளாந்தம் பெரிதும் பாவிக்கும் வீதிகளில் ஒன்றான பாம் வீதி மிக நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கின்றது. இதனை அபிவிருத்தி செய்வதில் காணப்படும் இழுத்தடிப்புக்களை கண்டித்து அண்மையில் அப்பிரதேச மக்களினால் கவனயீர்ப்புப் போராட்டம்  நடத்தப்பட்டது.

மக்களின் நீண்டகாலத் தேவையான இவ்விடயத்தை முன்னிலைப்படுத்தி இருக்கும் எமது அமைப்பு, இதனை அபிவிருத்தி செய்வதற்கான கோரிக்கையை பெருந்தெருக்கள் அமைச்சரிடம் மேற்கொண்டு அதற்கான அனுமதியையும் ஏற்கெனவே பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய முன்னோடி நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கிடையில், இவ்வீதி தற்போதைய நிலையில் படுமோசமாக காணப்படுகின்றமையால் இதனைத் தற்காலிகமாக செப்பனிட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். எனவே, இதற்கான அனுமதியை  காலதாமதமின்றி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேற்படி வீதியை  மக்களின் தேவை கருதி உடனடியாக செப்பனிடுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள நிலையில், இதற்கான அனுமதியை  உடனடியாக காத்தான்குடி நகரசபை வழங்கும் என்றும் எதிர்பார்க்கின்றது' எனத்; தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X