Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 12 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
கிழக்கு மாகாண காணி நிர்வாகத்; திணைக்களத்தினால் நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை (12) மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்சின் வேண்டுகோளுக்கு இணங்க மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அரச காணிகளில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக இந்த சேவை நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாண காணி ஆணையாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.
இதன்போது குறித்த காணி உரிமையாளர்களின் எல்லைப் பிரச்சினைகள், அனுமதிப் பத்திரம் வழங்கப்படாமைக்கான காரணங்கள் பற்றிய 150பேரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உதவிக் காணி ஆணையாளர்களான எஸ்;.ரவிராஜன், ஏ.ஹேரத், மட்டக்களப்பு கச்சேரியின் தஇமையக காணி உத்தியோகஸ்தர் குகதா ஈஸ்வரன், உதவிக் காணி உத்தியோகஸ்தர் கே.எல்.எம்.முசமில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தர்களான ஏ.எல்.எம்.தாஸிம், எஸ்.இராமகிருஷ்னன், எஸ்.லோகிதராஜன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
K.RAJALEDSUMY Friday, 13 March 2015 05:07 AM
meethi erukkum makkalin kaani pirasaikku thervu eayppothu kedaikkum
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago