2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஊர்வலம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 13 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், எம்.எம்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்

'பெண்களுக்கான சிறந்த நாடு' எனும் கருப்பொருளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களமும்  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த ஊர்வலம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலகப் பிரிவின் 48 கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள சமுர்த்தி சங்கங்களின் அங்கத்தவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தின் முடிவில் செயலக வளாகத்தில் சூரியா பெண்கள் அமைப்பினால் ஒளியை நோக்கி எனும் தலைப்பில் வீதி நாடகம் இடம்பெற்றது.

'பெண்கள் நாட்டின் கண்கள்', 'தியாக சிந்தனை படைத்த பெண்ணினத்தை பெருமைப்படுத்துவோம்', 'பொறுமையுள்ள பெண்ணுக்கு சமவுரிமை வழங்குங்கள்', 'பாலியல் துன்புறுத்தலிலிருந்து பெண்மையை காப்பாற்றுவோம்', 'பெண்களை என்றும் முன்னிலைப்படுத்துவோம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X