2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு வீதி ஒழுங்குகள் தொடர்பில் செயல்முறைப் பயிற்சி

Sudharshini   / 2015 மார்ச் 14 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான செயல்முறைப் பயிற்சிகளை காத்தான்குடி வீதிப் போக்குவரத்து பொலிஸார் வழங்கி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதரவின் வழிகாட்டலின் கீழ், காத்தான்குடி பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜே.துசாரவின் நெறிப்படுத்தலுடன்  வீதிப் போக்குவரத்து ஒழுங்கு தொடர்பான செயல்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள ஆரையம்பதி மகாவித்தியாலய மாணவர்களுக்கு இப்பயிற்சிகள் வெள்ளிக்கிழமை (13) வழங்கப்பட்டன.

இதன்போது வீதி ஒழுங்கு விதிகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டதுடன், வீதி ஒழுங்குகளை கடைப்பிப்பதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டன.

ஆரையம்பதி மகாவித்தியாலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இதன்போது போக்குவரத்து சைகை தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜே.துசாரவினால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X