Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 மார்ச் 14 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு வாவியில் மருவி வரும் பாரம்பரிய மீன்பிடி முறையான தூண்டில் மீன்பிடி மீண்டும் உருவெடுத்துள்ளது.
இத்தூண்டில் மீன்பிடியில்மீனவர்கள் மட்டுமன்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுது போக்காகவும் தமது அன்றாட உணவுக்காகவும் ஈடுபட்டுள்ளனர்.
வாகரை, பனிச்சங்கேணி, ஏறாவூர், ஓந்தாச்சிமடம், கல்லாறு, துறைநீலாவணை உட்பட படுவான்கரைப் பிரதேசங்களில் அனேகமானோர் குறித்த மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
தூண்டிலில் மீனைப் பிடிப்பதற்கு இரையாக இறால் குஞ்சுகள், மட்டி மற்றும் மண்புழு என்பன பயன்படுத்தப்படுகின்றன.
மண்புழுவைக் கொண்டு பிடிக்கப்படும் மீன்களை நுகர்வோர் விரும்பி வாங்குவது குறைவாக உள்ளது என தூண்டில் மீன்பிடிப்பாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த மீன் பிடியில் கயல் மீன், செத்தல மீன் கோல்டன் மீன் என்பன அதிகமாகப் பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago