2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 14 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்துக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில், அவரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யுமாறு கோரி தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்கள் வெள்ளிக்கிழமை (13) பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர், மேற்படி மாணவர்கள் மூவரும் மாலை நேரத்தில் வீதி வழியே சென்றுள்ளனர். அச்சமயம் குறித்த ஆசிரியரின் முச்சக்கர வண்டி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட மாணவர்கள், ஆசிரியரின் பெயரைச் சொல்லி அவரது முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

வியாழக்கிழமை (12) தனது பாட நேரத்துக்கு வகுப்பறைக்கு வந்த ஆசியர், மேற்படி மாணவர்கள் மூவரையும் அழைத்து தன்னை அவமரியாதையாக பேசியதாக கூறி அடித்துள்ளார்.

இதனையடுத்தே மாணவர்கள் குறித்த ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடமாற்றும் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.மீறாசாஹிப் ஆகியோர், மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களை கற்றல் நடவடிக்கையில் ஈடுபட செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாணவர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வாக்குறுதி வழங்கியதையடுத்து  ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X