Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 மார்ச் 15 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தொழில் வழிகாட்டல் முழு நாள் கருத்தரங்கு, மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (14) நடைபெற்றது.
இக் கருத்தரங்கு, மட்டக்களப்பு மாவட்ட றோட்டறி மரபுரிமைக் கழகத்தின் தலைவரும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான எஸ். கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்கள் கடல் சார்ந்த துறைகளில் 2 வருடகாலமாக கல்வி கற்று சித்தி பெற்ற பின்பு, டெக் அதிகாரியாகப் பதவிபெற்று மாதாந்தம் 200,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இப்பல்கலைக்கழகம் இருந்தும் வடமாகாணம் மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இத்துறையில் அதிக ஆர்வம் கொண்டு கற்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமுத்திர பல்கலைக் கழக விரிவுரையாளர் எஸ். அருட்சிவம் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
மட்டக்களப்பு றோட்டறிக் கழகத் தலைவர் டொமிங்கோ ஜோர்ஜ், றோட்டறி மரபுரிமைக் கழகத்தின் செயலானர் வி. ஜெகநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago