2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கிடையில் ஐக்கியமும் புரிந்துணர்வும் வளர்க்கப்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 15 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கிடையில் ஐக்கியமும் புரிந்துணர்வும் வளர்க்கப்படவேண்டும் என்று காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலக இல்ல விளையாட்டு விழா, காத்தான்குடி கடற்கரையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'அலுவலகம்,  வீடு என்றுள்ள உத்தியோகஸ்தர்களுக்கிடையில் இவ்வாறான விளையாட்டுப்போட்டி மற்றும் கலாசார நிகழ்வுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.  அத்துடன், உத்தியோகஸ்தர்களுக்கிடையில்  மறைந்துகிடக்கும் திறமைகளை  வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பமாகவும் இவ்வாறான நிகழ்வுகள் அமைகின்றன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமை புரிகின்ற அனைத்து உத்தியோகஸ்தர்களையும் ஒருமுகப்படுத்தி அவர்களின் திறமைகள் வெளியில் கொண்டுவரப்படுகின்றன.

வருடாந்தம் இல்ல விளையாட்டு விழா நடத்தப்படுகின்றமை சிறப்பம்சமாகும். இதற்காக எமது உத்தியோகஸ்தர்கள் அனைவரும் பங்களிப்புச் செய்கின்றனர்' என்றார்.

இதன்போது கலாசார,  விளையாட்டு நிகழ்வுகள், நாடகம், பாடல், கவிதை, நகைச்சுவை போன்றவை  நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X