Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 15 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண முதலமைச்சரால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று அம்மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
விபத்தில் இரு கால்களையும் இழந்த ஒருவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஏறாவூர், மிச்நகர் கிராமத்தில் விற்பனை நிலையத்தை அமைத்துக்கொடுத்து, அதன் திறப்பு விழா நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்ற பின்னர், அக்கட்சிகளோடு இணைந்திருந்த தேசிய காங்கிரஸையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் கிழக்கு மாகாண அதிகாரப்பகிர்விலிருந்து ஓரங்கட்டப் பார்ப்பதுடன், ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட உறுப்பினர்களை பல மில்லியன் ரூபாய்களை கொடுத்து வாங்க முற்படுவது ஜனநாயகத்துக்கு முதலமைச்சர் செய்யும் பாரிய துரோகமாகும்.
மாகாணசபையின் புனிதத்தன்மையை இவ்வாறான ஜனநாயக விரோத செயலுக்கு பயன்படுத்த ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அது மாத்திரமன்றி, தனது முதலமைச்சர் பதவிக்கு கையெழுத்திடாத ஏனைய உறுப்பினர்களுக்கு பல மில்லியன் ரூபாய்களை கொடுக்க முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவை பணித்ததாக ஊடக சந்திப்பொன்றில் கல்வி அமைச்சரே கூறியிருக்கின்றார்.
மேலும், முதலமைச்சரான ஹாபீஸ் நஸீர் அஹமட் பணக்காரர்களில் ஒருவராக பேசப்படுபவர். ஏறாவூரில் எத்தனை ஏழைக்குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்து அவர்களது வாழ்வாதாரங்களை உயர்த்தி இருக்கின்றார்?' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago