2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 15 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  முருக்கன்தீவு ஆற்றில், முருக்கன்தீவு கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகேந்திரன் (வயது 28) என்ற இளைஞன்;  தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை  இயற்கைக்கடனை  முடித்துவிட்டு, வீட்டுக்கு  அருகிலுள்ள முருக்கன்தீவு ஆற்றில்  கழுவுவதற்கு  முயன்றபோது,  கால் தவறி ஆற்றில் விழுந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமையால்  உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போது, ஆற்றுக்கு அருகில் உயிரிழந்தவரின் காற்சட்டையை கண்டுள்ளனர். இந்த நிலையில், ஆற்றில் இறங்கி தேடியபோது,  சடலம் தென்பட்டுள்ளது. இதன் பின்னர் சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த  இளைஞன் சிறு வயதாக இருக்கும்போது,  பாரிசவாதம் நோயினால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X