Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 15 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி முச்சக்கரவண்டிச் சாரதிகள் நலன்புரிச்சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை (14) தெரிசெய்யப்பட்டனர்.
காத்தான்குடி முச்சக்கரவண்டிச் நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், புதிய காத்தான்கடி அன்வர் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன்போதே, புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த சங்கத்தின் தலைவராக என்.எம்.எம்.அபுல்பஸல் செயலாளராக எம்.எம்.ஸியாம், பொருளாளராக எம்.வை.சித்தீக், உப தலைவராக எம்.எச்.எம்.முசாதிக், உப செயலாளராக எம்.எம்.குதுப்தீன் உட்பட ஏழு பேர் கொண்ட நிர்வாகசபையும் தெரிவுசெய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் செயலாளர் மௌலவி ஏ.பி.எம்.நிஹார், முன்னாள் பொருளாளர் எம்.கலீலுர் றஹ்மான் உட்பட சங்கத்தின் பொதுச்சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் என்.எம்.அபுல் பஸல், 'காத்தான்குடி முச்சக்கரவண்டிகள் சாரதிகள் நலன்புரிச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்;றுள்ள உறுப்பினர் ஒருவர் மரணித்தால், அவருக்கு சங்கத்தினால் முதற்கட்டக் கொடுப்பனவாக 10,000 ரூபாவும் அங்கத்தவர் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் 5,000 ரூபாவும் சங்கத்தினால் வழங்கப்படும்.
2012ஆம் ஆண்டு 264 பேர் அங்கத்தவர்களாக இருந்த இச்சங்கத்தில், தற்போது 500 க்கும் மேற்பட்டோர் அங்கத்தவர்களாக உள்ளனர். இதில் அங்கத்தவர்களாக உள்ளவர்களின் நலன் மற்றும் அவர்களின் தொழில் தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவ்வப்போது தீர்த்துவைத்து வருகின்றோம்' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago