2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பலாஹ் அறபுக்கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா

Thipaan   / 2015 மார்ச் 15 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை இரவு (14) கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது பட்டம் பெற்று வெளியேறிய எட்டு மௌலவிமார்களுக்கும் ஐந்து ஹாபிழ்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த வைபவத்தில் உரையாற்றிய கல்லூரியின் தலைவர் மௌலவி ஏ.எம்.அலியார் றியாழி,
கல்வியைப் பொறுத்தவரைக்கும் மாணவர்களை மையப்படுத்திய கல்வியும் சமூகத்தை மையப்படுத்திய கல்வியும் இன்றியமையாததாகும்.

காலத்துக்கு ஏற்ற வகையில் பல சவால்களுக்கு முகம் கொடுக்கும் அமைப்பிலே சமூகத்தின் தேவையை உணர்ந்து எதிர்பார்ப்புக்களுக்கு அமைவான திட்டத்தின் அடிப்படையில் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்லப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

கல்லூரியின் தலைவர் மௌலவி ஏ.எம்.அலியார் றியாழி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் உதவி பொதுச் செயலாளர் அஸ்ஸெய்ஹ் எம்.எம்.முர்ஸித் முழப்பர் ஹுமைதி, காத்தான்குடி காதி நீதிபதியும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவருமான மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உட்பட முக்கியஸ்தர்கள் உலமாக்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X