2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாநகர சபை ஊழியர் கௌரவிப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 16 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாநகர சபையில் சேவையாற்றி இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச்செல்லும் ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (14) நகர மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகர சபையின் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரின் தலைமையில் நடைபெற்றது.

இடமாற்றம் பெற்றுச்செல்லும் 3 உயரதிகாரிகள் உட்பட 29பேர் இந்நிகழ்வின்போது, கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது நலன்புரிச் சங்க உத்தியோகஸ்தர்களிடையே விளையாட்டு நிகழ்வுகளும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X