2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பகிரங்கசேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் ஏறாவூர்க்கிளைக்கு புதிய நிர்வாகம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 16 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பகிரங்கசேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் ஏறாவூர் கிளைக்கான புதிய நிர்வாகத்தெரிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

ஏறாவூர் கிளைத் தலைவர் எம்.கே.முகைதீன் தலைமையில் ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது, நடப்பாண்டின் தலைவராக ஏறாவூர் பிரதேச செயலக முன்னாள் நிர்வாக அதிகாரி எம்.கே.முஹைதீன்  மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் ஏ.சி.எம்.ஷயீட், உப தலைவராக  எஸ்.எம்.மீராமுஹைதீன், உப செயலாளராக எஸ்.எம்.சுலைமாலெப்பை, பொருளாளராக எஸ்.எச்.எம்.ஹுஸைன், நிர்வாகக்குழுவில் எம்.எஸ்.அபுல் ஹஸன், எம்.எஸ்.பாறூக் உள்ளிட்ட ஏழு பேர்; தெரிவுசெய்யப்பட்டனர்.

தேர்தல் காலத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு ஓய்வூதியர்களுக்கான  ஓய்வூதியக் கொடுப்பனவை 1,000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய்வரை அதிகரித்தல் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்படவேண்டும்.

ஆட்சி மாற்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் இடைக்கால வரவு -செலவுத்திட்டத்தின் மூலம், மக்களின் வாழ்க்கைச் செலவை கருத்திற்கொண்டு பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளதுடன், அரச ஊழியர்களுக்கு 10இ000 ரூபாய் சம்பள அதிகரிப்பை இட்டு மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1,000 ரூபாய் மாத்திரம் வழங்கப்படவுள்ளமை  அறிந்து மிகக் கவலையடைந்துள்ளோம்.

கடந்த காலத்தில் பல்வேறு துயரங்களுக்கும் போக்குவரத்து கஷ்டங்களுக்கும் முகங்கொடுத்து எந்தவித வசதி வாய்ப்புகளுமின்றி அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளிலும் கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ள ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பது ஓய்வூதியர்களுக்கு இழைத்த அநீதியாக நாம் பார்க்கின்றோம்.

அது மாத்திரமின்றி, புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் மார்ச் மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஓய்வூதியர்களுக்கான அதிகரித்த கொடுப்பனவு எப்ரல் மாதம் முதல்  வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால்,  ஓய்வூதியர்கள்  கவலையடையவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த காலத்தில்; பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடமையாற்றி நாட்டுக்காக உழைத்த ஓய்வூதியர்களுக்கான சம்பள அதிகரிப்பை ஆகக் குறைந்தது  3,500  ரூபாயாக அதிகரித்து வழங்க ஏன்  அரசாங்கம்  முன்வரவில்லை என்ற கேள்வி எம் மத்தியில் இருக்கின்றது.

இதனைப் பார்க்கும்போது ஓய்வூதியம் பெறுகின்ற சிரேஷ்ட பிரஜைகளை அரசாங்கம் ஓரக்கண்ணால் பார்ப்பதாகவே நாம் கருதுகின்றோம். ஆதலால்,  ஓய்வூதியர்களுக்கான அதிகரித்த சம்பளக் கொடுப்பனவை 1,000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக  அதிகரிப்பதோடு, 100 நாள் வேலைத்திட்டத்தினுள் உள்வாங்கி அமுல்படுத்த வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கான இலவச போக்குவரத்து பாஸ் வழங்கப்பட வேண்டும்.  ஓய்வூதிய காலத்தில் நிம்மதியடைவதற்காக வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X