2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இந்து ஆலயங்களின் பரிபாலனத்தை ஒழுங்குபடுத்தும் கைநூல் வெளியிட ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 16 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களின் அபிவிருத்தி மற்றும் அவற்றின் பரிபாலனத்தை  ஒழுங்குபடுத்தும் வழிகாட்டிக் கைநூலின் வெளியீடு தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில்  நடைபெறவுள்ளதாக மாவட்ட இந்து கலாசார உத்தியோகஸ்தர் கே.குணநாயகம் தெரிவித்தார்.

இதில்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் பிரதேச செயலாளர்கள், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் இந்து ஆலயங்களும் நீதிமன்றம், சட்ட வரையறைகள் தொடர்பில் மாவட்ட நீதிமன்றச் சட்டத்தரணி இரா.கண்ணன் விளக்கமளிக்கிறார்.  அத்துடன், சமுதாய அபிவிருத்தியில் இந்து ஆலயங்களின் காத்திரமான பங்களிப்பு தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்;ட விரிவுரையாளர்  சாந்தி கேசவனும் உரையாற்றுகிறார்.

எனவே மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களின் பரிபாலனசபைத் தலைவர், செயலாளர்கள் அவசியம் கலந்துகொண்டு ஆலய பரிபாலனசபை தொடர்பான கையேட்டை பெற்றுப் பயனடையலாம் என்றும் மாவட்ட இந்து கலாசார உத்தியோகஸ்தர் கே.குணநாயகம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X