Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 17 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
2015ஆம் ஆண்டு ஜனவரிக்கு முன்னர் எதையெல்லாம் போலி அரசியல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதோ, அவற்றையெல்லாம் இன்று அது செய்துவருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
போரதீவில் திங்கட்கிழமை (16) மாலை ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தரம் -1 மாணவர்களுக்கும் அரசியல் பாடம் எடுக்கும் பரிதாப நிலை மட்டக்களப்பில் தொடர்கின்றது. 2015ஆம் ஆண்டு ஜனவரிக்கு முன்னர் பாடசாலை விழாக்கள், நிகழ்வுகளில் கலந்துகொண்டு யதார்த்தமாக உரையாற்றினாலும், பாடசாலைகளில், அரசியல் பேசுகின்றார்கள், ஆசிரியர்களுக்கு அரசியல் கருத்துக்களை திணிக்கின்றார்கள் என்று அறிக்கை விட்ட பல அரசியல் தமிழ்த் தலைவர்கள், இன்று என்ன செய்கின்றார்கள்?
தரம் -1 மாணவர்களின் இல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் மாலை 6 மணிவரை கூட்டத்துடன் சென்று அரசியல் வீரவசனம் பேசுபவர்கள், தம்மை தமிழர்களுக்காக போராடிய போராளிகளாக சித்தரிக்க முனைகின்றனர்.
போராட்டம் உக்கிரமாக இடம்பெற்றபோது கூட எந்தவித பங்களிப்பும் செய்யாது போராட்டத்தை விமர்சித்த இவர்களுக்கு, போராட்டத்தில் களம் கண்டு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்து போராட்டம் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவை பெற்றுத்தராது என்ற யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக ஜனநாயக ரீதியாக அரசியலுக்கு வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் போராட்டத்தின் பரிசாக அங்கத்தில் துப்பாக்கி ரவைகளை தாங்கிநிற்கும் அதன் தலைமைகளையும் விமர்சிக்க எந்த வகையிலும் அருகதை அற்றவர்கள்.
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுவதல்ல அரசியல். தாம் சார்ந்த சமூகத்துக்காக ஏதாவது செய்ய முயலவேண்டும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் காட்டிய மாகாணசபை அதிகாரத்தின் பாதையே தமிழர்களின் தீர்வு விடயத்தில்; ஆரம்பப்படி என்பதை தற்போது உணர்ந்து பயணிக்கும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மக்களின் நலன் சார்ந்து ஆக்கபூர்வமாக சிந்திக்கவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .