Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 17 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.
2014ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் திறமையாக சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு கற்பித்த பாட ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரி முதல்வர் எம்.எல்.ஏ.ஜூனைட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மட்டக்களப்பு மத்திய வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹிப், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.சுபைர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், டாக்டர் எம்.பி.எம்.பிர்னாஸ், டாக்டர் ஜெஸீர், கல்லூரியின் முன்னாள் முதல்வர் எம்.சி.எச்.முஹம்மட், கல்லூரியின் பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .