Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 17 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம்
கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாமலுள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பித்துள்ளனர்.
வழங்கப்படாமலுள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (16) மேற்கொண்டிருந்தனர். இதற்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்திலேயே, ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் பந்தல் அமைத்து 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு சாதகமான பதில் சம்பந்தப்பட்ட கைத்தொழில்த்துறை அமைச்சிடமிருந்து கிடைக்கும் பட்சத்திலேயே உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படும் என்றும் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
தற்போது ஏதும் அற்ற அநாதைகளாக வீதியில் வந்து போராட்டம் நடத்துவதற்குரிய சூழ்நிலையை ஆலை முகாமைத்துவம் மற்றும் இது தொடர்பான அமைச்சும் ஏற்படுத்தியுள்ளமையை எண்ணி தாங்கள் கவலை அடைவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினர்.
இதற்கிடையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் கலந்துரைடியாடினார். இந்த நிலையில், தங்களது நீண்டகால பிரச்சினைக்கு தீர்;வு பெற்றுத்தருவதாக அவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், தங்களது விடயத்துக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் குறித்த இடத்திலிருந்து அசையப்போவதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் கூறியதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினர்.
'கைத்தொழில் அமைச்சரே! கடதாசி ஆலை சீராக இயங்கமுடியாவிட்டால் எம்மை கட்டாய ஒப்பந்தத் திட்டத்தில் அனுப்ப முடிவு எடு', 'கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களே! கடதாசி ஆலையில் கடமையாற்றும் 300 தொழிலாளர்களின் நிலைமை பற்றி சற்று சிந்தியுங்கள்', 'ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, ஊழியர் பணிக்கொடை போன்றவற்றை வழங்க அரசே நடவடிக்கை எடு'. துண்டிக்கப்பட்ட மின்சாரத்தினை வழங்க நடவடிக்கை எடு என்பன் போன்ற பல வாசகங்களை கையில் ஏந்தியவாறும் பந்தலில் காட்சிப்படுத்தி உண்ணணாவிரதத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .