Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 17 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாநகர எல்லைப்பகுதிக்குள் டெங்கு நோய்;த் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம், இன்று செவ்வாய்க்கிழமை புனித மிக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்டத்திடலில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் உலக தரிசனத்தின் வாகரை திட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்த இந்த நிழ்வில், டெங்கு தாக்கும் முறைகள்; மற்றும் கட்டப்படுத்தும் முறைகள் பற்றி பனிச்சங்கேணி திருமகள் மகாவித்தியாலய மாணவர்களால் வீதி நாடகம் நடித்துக்காட்டப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 360 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, விழிப்புணர்வு வீதி நாடகம் ஏறாவூர் மகா வத்தியலயத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றதுடன், துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .