2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புகையிரதம் மோதி 6 மாடுகள் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 18 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குகநேசபுரம் பகுதியில் புதன்கிழமை (18) அதிகாலை  புகையிரதம் மோதி  ஆறு மாடுகள் இறந்துள்ளதுடன், ஐந்து மாடுகள் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (17) இரவு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த  'மீனகயா' என்ற கடுகதி   புகையிரதமே இந்த மாடுகள் மீது மோதியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.   

இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X