Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 18 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி சுகாதார அலுவலகப்பிரிவில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம்; 17ஆம் திகதிவரை 33 பேருக்கு டெங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ஆரையம்பதி சுகாதார அலுவலக பொதுச்சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்தப் பிரிவில் டெங்கு காய்ச்சலினால் ஒரு மரணம் சம்பவித்துள்ளது.
மேற்படி பிரிவில் செல்வா நகர் கிழக்கு கிராமத்திலேயே அதிகளவானோர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
டெங்கு ஏற்படாமல் தடுப்பதற்காக ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி, டாக்டர் வி.பவித்ராவின் வழிகாட்டலில், விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மண்முனைப்பற்று பிரதேச சபை மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர், கிராம உத்தியோகஸ்;தர்கள், பொலிஸார், குடும்பநல உத்தியோகஸ்தர்களின் ஒத்துழைப்புடன் டெங்கொழிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பசீர், பொதுச்சுகாதார பரிசோதகர்களான கே.சத்தியானந்தன், கே.இளங்கோ, வி.கணேசன் ஆகியோரின் உதவியுடன்; இங்குள்ள வீடுகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன.
செல்வா நகர் கிழக்கு கிராமத்தில் 638 வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், இங்கு டெங்கு நுளம்புகள் பரவும் சூழலை வைத்திருந்த 11 பேருக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .