2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது நாளாக தொடர்கின்ற வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 18 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாமலுள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமையும்  மேற்கொண்டுவருகின்றனர்.

தங்களது கோரிக்கைக்கு இதுவரையிலும்; நல்லதொரு தீர்வு கிடைக்கவில்லை எனவும் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

வழங்கப்படாமலுள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள்  கவனயீர்ப்புப் போராட்டத்தை ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (16) மேற்கொண்டிருந்தனர்.  இதற்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்திலேயே,    ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் பந்தல் அமைத்து 200 க்கும்  மேற்பட்ட  ஊழியர்கள்  சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது போராட்டத்துக்கு  சாதகமான பதில்  சம்பந்தப்பட்ட கைத்தொழில்த்துறை அமைச்சிடமிருந்து கிடைக்கும் பட்சத்திலேயே, உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படும் எனவும்  ஆலை ஊழியர்கள் நேற்றையதினம்  தெரிவித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X