Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 18 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஊடகங்கள் தவிர உரிய தரப்பினர் எவரும் கண்டுகொள்ளவில்லையென அந்த போராட்டத்தில் குதித்துள்ள வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் புதன்கிழமை (18) தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் மாத்திரமே வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஊழியர்கள் தமது போராட்டம் தொடர்பாக கரிசனை காட்டிவரும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தங்களுக்கு நிலுவையாக உள்ள நான்கு மாத சம்பள நிலுவையை வழங்குமாறு கோரி கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டத்தில் எந்த தீர்வும் கிடைக்காமையினால் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் அமர்ந்து தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 'நாங்கள் எங்களது சம்பளப் பிரச்சினை காரணமாக வீதியில் இறங்கி இன்றுடன் மூன்று நாட்களாகிவிட்டன' எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, உண்ணா விரதத்தில் குதித்துள்ள கடதாசி ஆலை ஊழியர்களுடன் மயிலம்கரைச்சை ஸ்ரீ போதி ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி மஹிந்தா லங்கார தேரரும் இணைந்துகொண்டுள்ளார்.
ஊழியர்களது போராட்டம், ஆலை நிர்வாகத்துக்கோ அல்லது அரசியல் பிரமுகர்களுக்கோ எதிரானது அல்ல. அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை வழங்கக் கோரியே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தி வருவதாக ஸ்ரீ போதி ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி மஹிந்தா லங்கார தேரர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .