Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 மார்ச் 18 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்புக்கு வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளின் நலன் கருதி, மட்டக்களப்பு பார் வீதியை அகலப்படுத்தி கார்பட் இடும் பணிகள் இன்று புதன்கிழமை (18) நடைபெற்றன.
அரசடியிலிருந்து பாலமீன்மடு வரை உள்ள பிரதான வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கார்பட் இடப்படுவதாக மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எஸ். சசிநந்தன் தெரிவித்தார்.
பாலமீன்மடு லைட் ஹவுஸ் பிரதேசம், அப்பிரதேசத்தில் உள்ள வாவிப் படகுச் சவாரி மற்றும் பூங்கா என்பவற்றை பார்வையிடவரும் உல்லாசப் பிரயாணிகளின் நன்மை கருதி, அரசடியிலிருந்து 2 கி.மீ. வரை கார்பட் இடும் பணி முடிவுற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த வீதியில் வரலாற்றுப் புகழ் மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயம், பனம் பொருள் உற்பத்திப் பொருட்களின் காட்சியகம் மற்றும் மட்டக்களப்பின் மரபுரிமைமிக்க இடங்களைப் பற்றி விவரிக்கும் காட்சியகமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .