2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுடன் யோகேஸ்வரன் எம்.பி. கலந்துரையாடல்

Administrator   / 2015 மார்ச் 18 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாமலுள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரி சுழற்சி முறையில்  உண்ணாவிரதப் போராட்டத்தை  மேற்கொண்டுவருகின்ற வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் புதன்கிழமை (18) மாலை சென்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

வழங்கப்படாமலுள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரி வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள்  கவனயீர்ப்புப் போராட்டத்தை ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (16) மேற்கொண்டிருந்தனர்.  இதற்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில்,    ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் பந்தல் அமைத்து 200 க்கும்  மேற்பட்ட  ஊழியர்கள்  சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமையிலிருந்து  (17) மேற்கொண்டுவருகின்றனர்.

இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவிக்கையில்,

'சம்பளப் பிரச்சினை தொடர்பில் வாழைச்சேனை  ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக  அமைச்சர் ரிசாட் பதியுதீனை கொழும்பில் செவ்வாய்க்கிழமை (17) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். இதன்போது அவர்,  வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் சம்பள நிலுவையை வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான அனுமதி  அமைச்சரவைக் கூட்டத்தில் கிடைக்கும் என்றும் கூறினார்.  இதன் பின்னர்,  சம்பளத்தை உடனடியாக  வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர்  உறுதியளித்துள்ளார். இன்னும் இரண்டு தினங்களுக்குள் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் சம்பள நிலுவை கிடைத்துவிடும் என்றும்  அவர் உறுதியளித்துள்ளார்' என்று  தெரிவித்தார்.

இந்த நிலையில், சம்பளம் எங்களின் கைகளுக்கு கிடைக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X