2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வெள்ள மீட்சி வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 19 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ், பாம் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெள்ள மீட்சி வேலைத்திட்டத்தின் ஆரம்ப கூட்டம், இன்று வியாழக்கிழமை (19) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில், 13 மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில், 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைத்தல், 1,000 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்களை வழங்கல், 1,000 கிணறுகளை சுத்திகரித்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.

இம்மாதம் முதல் இவ்வருட இறுதிவரை 8 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வெள்ள மீட்சி வேலைத்திட்டத்தில் 2,300 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யூ.எஸ்.எயிட். இன் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி பியுமா வோங், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், பாம் நிறுவனத்தின் பணிப்பாளர் சுனில் டொம்பேபொல உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X