Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 19 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகரசபை பிரிவால், முறையற்ற விதத்தில் புனரமைக்கப்பட்ட கிறவல் வீதியால் தாம் பல்வேறு அளெகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் இதனால், மேற்படி வீதயை உடனடியாக அகற்றித்தருமாறு கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிடம் பிரதேச மக்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
அல்அமீன் வீதி, 6ஆம் ஒழுங்கையில் வசித்துவரும் குடியிருப்பாளர்களின் முறைப்பாட்டையடுத்து நேற்று நேற்று புதன்கிழமை(18) மேற்படி வீதியை பார்வையிடச் சென்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகளிடமே அப்பகுதி குடியிருப்பாளர்கள் இந்த மகஜரை கையளித்தனர்.
காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான எஸ்.எச்.பிர்தௌஸ், எம்.எச்.ஏ.மிஹ்ழார் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சூறாசபை உறுப்பினர்களான எம்.எம்.அமீர் அலி எம்.வை.சரீப், கே.எம்.புஹாரி உள்ளிட்ட குழுவினர் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.
இவ்வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன்போது பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .