Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 மார்ச் 20 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
மூதூர் மல்லிகைத்தீவு பச்சைநூர் என்ற இடத்தில் நேற்று (19) வியாழக்கிழமை இரவு 8.10 மணியளவில் இடம் பெற்ற உழவு இயந்திரமும் பேரூந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 5 பேர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு பேரூந்து ஓட்டுநரும் பெண்ணொருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்றுமொருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு பயணிகளை ஏற்றி வந்த பேரூந்தும், வேளாண்மை அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றை ஏற்றி வந்த உழவு இயந்திரமுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .