Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 மார்ச் 20 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யோ.சேயோன்
காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை பெற்றுதருமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பு வெள்ளாவெலி பிரதேச செயலகத்தை சுற்றிவளைத்து சுமார் 20 கிராமங்களைச்சேர்ந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதனால் பிரதேச செயலகத்தின் பணிகள் யாவும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்துக்குள் நுழைவதற்கு முயற்சித்தமையால் பிரதேச செயலகத்தின் வாயிலும் இழுத்து பூடப்பட்டுள்ளது.
காட்டுயானைகளின் பிரச்சினைகளுக்கு இரண்டு வாரகாலத்துக்குள் தீர்வை பெற்றுதருவதாக பிரதேச செயலாளர் என். வில்வரத்தினம் உறுதியளித்த போதிலும் அந்த வாக்குறுதியை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயரதிகாரிகள் வரும் வரையிலும் ஆர்ப்பாட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .