2025 மே 20, செவ்வாய்க்கிழமை

13ஆவது அரசியல் திருத்தம் நிறைவேற்றப்படும்: கிழக்கு முதலமைச்சர்

Kanagaraj   / 2015 மார்ச் 20 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம்.நூர்தீன் 

அரசியல் தீர்வை நோக்கி நமது நகர்ந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் 13ஆவது அரசியல் திருத்தம் நிறைவேற்றப்படும் என்ற நிலைப்பாடு உண்டு என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபாபீஸ் நசீர் அஹமட், காத்தான்குடியில் வைத்து தெரிவித்தார். 

காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும்மா பள்ளிவாயலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆத்தொழுகையின் பின்னர் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இங்கு தொடர்ந்துரையாற்றி; முதலமைச்சர் பதவியில் பெரிய அதிகாரமில்லா விட்டாலும் சமூகத்தின் அடையாளத்தைக்காட்டுகின்ற ஒரு பதவியாகவுள்ளது. 

கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் வருவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கும் ஒரு காரணமாகும். அவர் என்னை முதலமைச்சராக நியமிப்பதற்கு கையொப்பமிட்டார். அதற்காக நான் இந்த சந்தாப்பத்தில் நன்றி கூறுகின்றேன். 

முதலமைச்சர் பதவி என்பது பிரதேச வாதங்களுக்கப்பால் செயற்பட வேண்டிய பதவியாகும் இந்தப்பதவியை நான், இன மத மொழி பிரதேச வேறுபாடின்றி பயன் படுத்துகின்றேன். 

சமாதானம் நிலவினாலும் பாரிய சிக்கல்கள் நிறைந்த காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருக்கின்றது. இந்தக்காலகட்டத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். 

எதற்காக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதோ அந்த மாகாண சபைகளின் உண்மையான அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். 

13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக அமுல் படுத்தப்படும் நிலையில்  இதில் வழங்கப்படும் அதிகாரங்கள் முக்கியமான விடயமாகும். 

இந்த நிலையில் நாம் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்ட வேண்டும். நமக்குள் பிரதேச வேறுபாடுகள் அரசியல் கட்சி வேறுபாடுகள் அனைத்துக்கும் அப்பால் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். 

தேர்தல் வரும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். ஆனால், தற்போது ஒற்றுமை என்பது மிக முக்கிமாகும் என்றார். 

இதில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், முன்னாள் மாகாண உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் முதல்வர் மர்சூக் அகமது லெவ்வை, பள்ளிவாயலின் செயலாளர் எம்.ஐ.உசனார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X