Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 20 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தங்களது நிலுவைச் சம்பளத்தை வழங்க, மேற்படி ஆலையின் நிர்வாகம் இன்று வெள்ளிக்கிழமை இணக்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சம்பளம் பணம் கையில் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாகத் தெரிவித்த போராட்டக்காரர்கள், தங்களது போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தங்களது நிலுவைச் சம்பளத்தை வழங்குமாறு கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமையும் (20) ஐந்தாவது நாட்;களாக மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது கோரிக்கைக்கு செவிசாய்த்து இன்று வெள்ளிக்கிழமை காலை காகித ஆலையின் தவிசாளர் சுனில் கந்தேகெதர, அவ்விடத்துக்குச் சென்று, தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
கடந்த நான்கு மாதங்களுக்கான சம்பளம் மட்டுமல்லாது தற்போதைய 2015 மார்ச் மாதத்துக்குரிய சம்பளப் பணத்தினையும் சேர்த்து எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
அத்துடன், ஆலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பற்றி ஆலையின் முகாமை மற்றும் தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை ஆலையின் வளாகத்தில் உள்ள பணிமனையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, முதலில் சம்பளப் பணம் பெற்றவுடன் எதிர்காலத்தில் ஆலை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக தொடர்ந்து பேசுவோம் என்றும் நாங்கள் சம்பள நிலுவை கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து நடத்துவோம் என தவிசாளரிடம் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்து பேச்சுவார்த்தையின் போது இடைநடுவில் வெளியேறி தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். தற்போது குறித்த இடத்தில் உண்ணாவிரதத்தினை காகித ஆலை ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .