Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 மார்ச் 20 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நாளை சனிக்கிழமை விஜயம் செய்யும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ இடம்பெயர்ந்த சிங்கள மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தேவைகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இரண்டு நாட்கள் மட்டக்களப்பில் தங்கவுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் சிங்களக் குடும்பங்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், சிவில் அமைப்புக்களையும் சந்திக்கவுள்ளார்.
மட்டக்களப்புக்கு நாளைய தினம் சனிக்கிழமை காலை வருகை தரும் கிழக்கு மாகாண ஆளுனர் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கல்குடா பிரதேசத்திலுள்ள இடம்பெயர்ந்த சிங்கள குடும்பங்களைச் சந்தித்துக் கலந்துரையாடுகிறார்.
அதனையடுத்து மட்டக்களப்பு நகரின் மண்முனை வடக்கு பிரதேச செயலார் பிரிவின் கருவேப்பங்கேணி, ஜயந்திபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இடம் பெயர்ந்த சிங்களக் குடும்பங்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை, மட்டக்களப்பு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஈஸ்ற்லகூன் சுற்றுலா விடுதியில் சந்திக்கவுள்ளார்.
அத்துடன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் தளவாய், ஏறாவூர் -4 மற்றும் 5, பெரியபுல்லுமலை, கோப்பாவெளி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த இடம் பெயர்ந்த சிங்கள மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .