2025 மே 19, திங்கட்கிழமை

'2,577 பொலிஸார் உயிரிழந்துள்ளார்கள்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 22 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இதுவரையில் 2,577 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் வாகிஸ்ஸ தெரிவித்தார்.

உயிரிழந்த பொலிஸாரை நினைவுகூரும்  151ஆவது நினைவுதினம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஆண்டு தோறும் மார்ச் மாதம் 21ஆம் திகதி உயிரிழந்த பொலிஸார் நினைவுகூரப்படுகின்றனர்.  இதனை பொலிஸ் திணைக்களம் நடத்திவருகின்றது.

இலங்கையில் பொலிஸ் சேவையிலிருந்து முதல் உயிரிழந்தவர் யூசுப் மரைக்கார் ஆவார். 2,577 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.  அதேபோன்று 1,321 பொலிஸார் அங்கவீனமடைந்துள்ளனர்.

கடந்த யுத்தத்தின்போது திருக்கோவில் பிரதேசத்தில் 400 பொலிஸார் ஒரே நாளில் கொல்லப்பட்டதுடன், 11 அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த பொலிஸார் தாய் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பான சேவை என்றும் நாம் மதிப்புடன் நினைவுகூருகின்றோம்  உயிரிழந்த பொலிஸாரில் அதிகமானோர் வட, கிழக்கில் யுத்தத்தின்போது உயிரிழந்துள்ளார்கள்.

பொலிஸார் யுத்த காலத்திலும் அமைதியையும் சமாதானத்தையும் சிவில் நிர்வகாத்தையும் நிலை நாட்டுவதற்காக பாடுபட்டதை நாம் நன்றியுடன் பார்க்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X