Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 22 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார், எஸ். பாக்கியநாதன்
கல்வியில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது. சுதந்திரமான கல்வி நிர்வாகம் நடைபெற வேண்டும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
களனிப்பல்கலைக்கழக பட்டதாரிகளின் கிழக்கு மாகாண நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சண்சைன் ஹோட்டல் மண்டபத்தில் சனிக்கிழமை (21) மாலை நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்
போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சுதந்திரமான கல்வி நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதையே நான் விரும்பகின்றேன். அதற்காக என்னால் முடிந்த வரை படுபடுவேன். கடந்த காலங்களில் நான் கல்வி நிர்வாக கட்டமைப்பில் வகித்த பதவிகளின் அடிப்படையில், அரசியல் தலையீடுகள் பற்றி நான் நன்கு அறிவேன்.
இந்த மாகாண சபைக்கு முந்திய மாகாண சபையில் எனக்கு ஏற்பட்ட பெரிய அரசியல் அழுத்தங்கள் மற்றும்; ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் தொடர்பில் மிகப் பெரிய அரசியல் இடங்களிலிருந்து வந்த கட்டளைகளை நான் நிறைவேற்ற வில்லை. நீதியற்ற இடமாற்றங்களை செய்யாததன் காரணமாக என் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
அரசியல் ரீதியான அழுத்தங்களை எவ்வளவு தூரம் நாங்கள் சமாளிக்கின்றமோ அந்தளவு தூரம், எமது மாகாணத்தில் முறையான கல்வி நிருவாகத்துக்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
கிழக்கு மாகாணத்திலேயே ஆகக் கூடுதலான ஆளணியினரைக் கொண்ட அமைச்சு எங்களுடைய கல்வியமைச்சாகும். இதில் ஆசிரியர்கள், அதிபர்கள் அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கலாக 24000 பேர் கடமையாற்றுகின்றனர். அதே போன்று கிழக்கு மாகாணத்தில் அதிக செலவீனங்களைக் கொண்ட அமைச்சும் எமது கல்வியமைச்சாகும்.
கல்வியமைச்சர் என்பவர் ஒரு நேரடியான கல்வி நிருவாகி அல்ல. நான் கல்வியமைச்சர் என்பதுக்காக ஒரு ஆசியருக்கு இடமாற்றக் கடிதத்தினை வழங்க முடியாது. நான் ஒரு அதிபருக்கு நியமனக்கடிதத்தை வழங்க முடியாது. அதே போன்று ஒரு சிற்றூழியருக்கேனும் ஒரு பதவியுயர்வுக் கடிதத்தை வழங்க முடியாது.
இதை வழங்க கூடிய நிர்வாக கட்டமைப்பான மாகாண கல்விப்பணிப்பாளர் வலயக் கல்விப்பணிப்பாளர், கல்விச் செயலாளர் என்பவர்களினூடாகத்தான் மேற்கொள்ள முடியும்.
கல்வியமைச்சர் என்பவர் ஒரு மேற்பார்வை, வழிப்படுத்தல், ஆலோசனை வழங்குதல், பாரபட்சமான செயல்கள் இடம்பெற்றால் அதை தடுப்பது போன்ற விடயங்களை செய்யலாம் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago