2025 மே 19, திங்கட்கிழமை

கணினிமயமாகியது மட்டு. பொது நூலகம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 23 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகரசபையின் மட்டக்களப்பு பொது நூலகம், கொய்க்கா நிறுவனத்தின் அனுசரணையுடன கணினி மயப்படுத்தப்பட்டு திங்கட்கிழமை (23) காலை திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது, சிறுவர்களுக்கான நூலகமும் காணொளிக்கூடமும்  திறந்துவைக்கப்பட்டன.

கொய்க்கா நிறுவன உத்தியோகஸ்தர்கள் இந்த நூலகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கடமையாற்றி  நூலகத்தை கணினி மயப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  கொய்க்கா நிறுவனத்தின் பதில் வதிவிட பிரதிநிதி சிங்யோங் நில், மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X