2025 மே 19, திங்கட்கிழமை

விசேட தேவையுடையோருக்கு ஜப்பானியத் தொண்டரினால் உதவி

Princiya Dixci   / 2015 மார்ச் 24 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைத் திணைக்களத்தில் இணைக்கப்பட்டுள்ள ஜப்பான நாட்டு ஜெய்க்கா (JAICA) திட்ட சமூக சேவைத் தொண்டர் ஷிஹோ அன்ஷாய் (SHIHO ANZAI) இனால் மட்டக்களப்பில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றல், விளையாட்டு உபகரணங்கள், திங்கட்கிழமை (23) வழங்கப்பட்டன.

இந்த உதவிகளை ஷிஹோ அன்ஷாய், நேரடியாக மாற்றுத் திறனாளிகள் தங்கியிருக்கும் இல்லங்களுக்குச் சென்று வழங்கினார்.

வாழ்வோசை செவிப்புனற்றோர் பாடசாலை, மென்கபெப் மனநிலை குறைந்தோர் பாடசாலை, ஓஸானம் மூளை வளர்ச்சி குறைந்தோர் நிலையம், தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை, ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலை ஆகிய விசேட தேவைக் காப்பகங்களிலுள்ள மாணவர்களின் நன்மை கருதி இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

ஓவியம் வரையும் உபகரணங்கள், சக்கர நாட்காலிகள் மற்றும் பார்வையற்றோருக்கான பிறைல் உபகரணம் என்பவை வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X