2025 மே 19, திங்கட்கிழமை

'காத்தான்குடி நகரசபையால் வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுப்பு'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 24 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த நான்கு வருடங்களில் ஊழல் மோசடி அற்ற வகையில், காத்தான்குடி நகரசபை மூலம் வேலைத்திட்டங்களை  சிறப்பாக முன்னெடுத்துள்ளதாக நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபையின் அமர்வு கூட்ட மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

'கடந்த 1.4.2011ஆம் ஆண்டு  காத்தான்குடி நகரசபையை நாங்கள் பொறுப்பேற்று கடந்த  நான்கு வருடங்களிலும்  இந்த நகரசபை மூலமான வேலைத்திட்டங்களை சிறப்பாக செய்துள்ளோம்.

இந்த நகரசபையை  நாம் பொறுப்பேற்றபோது திண்மக்கழிவு முகாமைத்துவம்,  மாடுகள்  வெட்டும் மடுவம், வடிகான் போன்றவை தொடர்பில்  பிரச்சினைகளையும் சவால்களையும் எதி;ர்நோக்கினோம்;. தற்போது இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அத்துடன், காத்தான்குடி நகரசபைப் பிரிவில் 9,000 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம்.

இதுவரையில் எமது நகரசபையினால் 40 கிலோமீற்றர் தூரம் வரையான வடிகான்களை அமைத்துள்ளோம். மடுவம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நான் தவிசாளரக இருந்து ஆட்சி செய்யும் இந்தக் காலப்பகுதியில் மக்களின் நன்மை கருதியும் எமது ஊரின் நன்மை கருதியும் பல தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டது. இதன்போது யாராவாது அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தால்,  அதற்கு நான் மன்னிப்பு கேட்கின்றேன்.  இது எமது கடைசி அமர்வாகவும் இருக்கலாம். இதுவரையில்  ஒத்துழைப்பு வழங்கிய நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள், செயலாளர், பொதுமக்கள்,  ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்' என்றார்.

இந்தக் கூட்டத்தில் நகரசபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம,; நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர்,  எம்.அலிசப்ரி,  சல்மா அமீர் ஹம்சா, எஸ்.எச்.பிர்தௌஸ், எம்.எச்.ஏ.மிஹ்ளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X