2025 மே 19, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள்கள் வழங்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 25 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

கடந்த அரசாங்கத்தினால்  கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.  தற்போதைய அரசாங்கம் கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில்,  காத்தான்குடி நகரசபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சுயேட்சைக்குழு உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகரசபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சுயேட்சைக்குழு உறுப்பினர் எஸ்.எச்.பிர்தௌஸ் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.நௌசாத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  கவனத்துக்கு கொண்டுவந்தார். இதையடுத்து,  உள்ளூராட்சிமன்றங்களின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொள்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை செலுத்துமாறு தமக்கு கடிதம் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தில் உள்ளூராட்சிமன்றங்களிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூடடமைப்பு  போன்ற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X